இந்தியாவிற்கு கூடுதல் எண்ணெய் வழங்கும் ரஷ்யா: வெளியான அறிக்கை

1 Min Read

இந்தியாவிற்கு கூடுதலாக கச்சா எண்ணெய் மற்றும் LNG விநியோகம் செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.

எரிசக்தி நெருக்கடி

மத்திய கிழக்கு போர் சூழலால் இந்தியா எரிசக்தி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Narendra Modi

இந்த சூழலில், புது டெல்லியைக் ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையே சந்திப்பு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் எண்ணெய் விநியோகம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்திய சந்தைக்கு எண்ணெய்

அதில், “எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்பின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இந்திய சந்தைக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விநியோகத்தை நிலையாக அதிகரிக்கும் திறன், ரஷ்ய நிறுவனங்களிடம் உள்ளது என்பதை டெனிஸ் மாந்துரோவ் உறுதிப்படுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

russia offers additional oil supplies to india

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் ஏறக்குறைய முடக்கியதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக மேற்கு ஆசியா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

russia offers additional oil supplies to india

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *