PSL 2026 போட்டியில் கராச்சி கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராவல்பிண்டிஸை வீழ்த்தியது.
டேர்ல் மிட்செல் அரைசதம்
முதலில் ஆடிய ராவல்பிண்டிஸ் அணியில் டேர்ல் மிட்செல் மற்றும் சாம் பில்லிங்ஸ் அரைசதம் அடிக்க, 20 ஓவர்களில் 197 ஓட்டங்கள் குவித்தது.
டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 41 பந்துகளில் 65 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), சாம் பில்லிங்ஸ் (Sam Billings) 35 பந்துகளில் 58 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) விளாசினர். ஹஸன் அலி 3 விக்கெட்டுகளும், குஷ்தில் ஷா 2 விக்கெட்டுகளும், மிர் ஹம்ஸா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் முகம்மது வசீம் 23 (11) ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து வந்த சல்மான் அகா 24 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, டேவிட் வார்னர் அதிரடியில் மிரட்டினார்.
வார்னர், அஸம் கான் அபாரம்
அவருடன் கைகோர்த்த அஸம் கான் (Azam Khan) சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்தக் கூட்டணி 41 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் அடித்த டேவிட் வார்னர் (David Warner) 36 பந்துகளில் 50 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

ருத்ர தாண்டவம் ஆடிய அஸம் கான் 34 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
எனினும் கராச்சி கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேர்ல் மிட்செல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






