ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடிய Gemma 4 AI மொடலை வெளியிட்ட Google

1 Min Read

Google தனது புதிய Gemma 4 AI மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது டேட்டா சென்டர்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல்வேறு சாதனங்களில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Google CEO சுந்தர் பிச்சை, “Gemma 4 ஒவ்வொரு பாராமிட்டரிலும் அசாதாரணமான அறிவுத்திறனை கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், Google DeepMind தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், “இது உலகின் சிறந்த திறந்த AI மொடல்கள்” என பாராட்டினார்.

Google Gemma 4 AI launch, Sundar Pichai Gemma 4 statement, Demis Hassabis Gemma 4 features, Gemma 4 smartphone AI model, Apache 2.0 open source AI #GoogleAI #Gemma4 #SundarPichai #DemisHassabis #AIModels #TechNews #OpenSourceAI

Gemma 4 நான்கு அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளது:

E2B (2 Billion parameters) – மொபைல் மற்றும் IoT சாதனங்களுக்கு

E4B (4 Billion parameters) – எட்ஜ் மற்றும் மொபைல் பயன்பாட்டுக்கு

26B MoE (Mixture of Experts) – நடுத்தர சக்தி கொண்ட மொடல்

31B Dense – மிக வலுவான Flagship மொடல்

இந்த மொடல்கள் Apache 2.0 License கீழ் வெளியிடப்பட்டுள்ளதால், டெவலப்பர்கள் சுதந்திரமாக பயன்படுத்தவும், மாற்றவும், மேம்படுத்தவும் முடியும்.

Gemma 4 140-க்கும்மேற்பட்ட மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளது.

Google, Pixel குழு, Qualcomm, MediaTek ஆகியவற்றுடன் இணைந்து, Gemma 4-ஐ ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடியதாக வடிவமைத்துள்ளது. இதனால், சாதாரண Android போன்களிலும், Raspberry Pi, Nvidia Jetson போன்ற சாதனங்களிலும் offline-ஆக இயங்க முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *