அந்நாடு கண்டிப்பாக இரண்டிலும் இருக்க முடியாது – புடின்

1 Min Read

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா தலைமையிலான சுங்கக் கட்டமைப்பில் ஆர்மேனியா இருக்க முடியாது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உறுப்புரிமை முடக்கம்

2024ஆம் ஆண்டில் ரஷ்யா தலைமையிலான CSTO பாதுகாப்பு கூட்டமைப்பில், முன்னாள் சோவியத் குடியரசான ஆர்மேனியா தனது உறுப்புரிமையை முடக்கியது.

Vladimir Putin

அதே ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் ஆர்வம் காட்டியது. இது ரஷ்யாவுடனான அதன் விரிசலை மேலும் ஆழப்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), “ஆர்மேனியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை வளர்ப்பது குறித்து பேசி வருவதை நாங்கள் காண்கிறோம்; இது குறித்து நாங்கள் முழுமையாக அமைதியுடனேயே இருக்கிறோம்.

ஆனால், இது தெளிவாக இருக்க வேண்டும்…ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரேசியப் பொருளாதார ஒன்றியம் ஆகிய இரண்டுடனும் ஒரே நேரத்தில் ஒரு சுங்கக் கூட்டமைப்பில் இருப்பது சாத்தியமற்றது. வரையறையின்படியே இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும்” என்றார்.

Nikol Pashinyan/Vladimir Putin

ஆனால், ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் (Nikol Pashinyan) கூறுகையில், இரு கூட்டணிகளிலும் இருப்பது ஒன்றுக்கொன்று ஒவ்வாதது என்பதைத் தாம் அறிந்திருப்பதாகவும், ஆனால் தற்போதைக்கு இரு வழிகளையும் பின்பற்றுவது சாத்தியம் என்றும் தெரிவித்தார்.

Nikol Pashinyan/Vladimir Putin

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *