பெங்களூருவில் தண்ணீரில் மூழ்கிய குழந்தை: மனமுடைந்து தாய் எடுத்த தவறான முடிவு

1 Min Read

பெங்களூருவில் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகத்தில் தாய் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் சோகம்

கடந்த புதன்கிழமை பெங்களூருவில் 29 வயது மென்பொறியாளரான தாய் பிரதீபா துவைத்த துணிகளை மாடியில் போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தவழ்ந்த வந்த அவரது 11 மாத குழந்தை அங்கிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்து மூழ்கியுள்ளது.

தாய் பிரதீபா மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் போது தண்ணீர் வாளிக்குள் குழந்தை அசைவு இல்லாமல் கிடப்பதை பார்த்து நிலைகுலைந்து உள்ளார்.

குழந்தை இறப்பிற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்த பிரிதீபா தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்.

பெங்களூருவில் தண்ணீரில் மூழ்கிய குழந்தை: மனமுடைந்து தாய் எடுத்த தவறான முடிவு | Bengaluru Mother Died After Infant Drowning

சோகத்தில் கணவர்

பிரதீபாவின் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் குழந்தை சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரிதீபா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் தான் மாடிக்குச் சென்ற போது இந்த சம்பவம் நடந்தததால் குழந்தை உயிரிழப்பிற்கு நான் மட்டுமே பொறுப்பு என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையின் தற்போது தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *