ஹோர்மூஸ் ஜலசந்தி எதற்கு? மாற்றுத் திட்டம் குறித்து திட்டமிடும் மத்திய கிழக்கு நாடுகள்

1 Min Read

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு பதிலாக, மாற்றுத் திட்டம் ஒன்றைக் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் திட்டமிடத் துவங்கியுள்ளன.

மாற்றுத் திட்டம்

உலகின் எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதம் அளவுக்கு ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் நிலையில், ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஹோர்மூஸ் ஜலசந்தி எதற்கு? மாற்றுத் திட்டம் குறித்து திட்டமிடும் மத்திய கிழக்கு நாடுகள் | Gulf Countries Consider Alternative For Hormouz

ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள விடயம், எரிபொருள் விலை உயர்வில் துவங்கி, பல்வேறு நாடுகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு வரை கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு பதிலாக, மாற்றுத் திட்டம் ஒன்றைக் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் திட்டமிடத் துவங்கியுள்ளன.

ஆம், எண்ணெய் போக்குவரத்துக்காக ஈரான் கையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, குழாய்கள் மூலம் எண்ணெய் கொண்டு செல்லும் திட்டங்களைத் துவக்கலாமா என மத்திய கிழக்கு நாடுகள் எண்ணத் துவங்கியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இத்தகைய திட்டங்களில் அதிக செலவுகள், அரசியல் சவால்கள் மற்றும் நீண்ட காலக்கெடு முதலான பிரச்சினைகள் இருந்தாலும், ஜலசந்தியில் போக்குவரத்து தடை செய்யப்படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு, புதிய குழாய்களை அமைப்பதே ஒரே சாத்தியமான வழியாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *