
இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் புளத்சிங்கள பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனடிப்படையில் ரிட்டிகல, குருநாகல் மற்றும் ஹிக்கடுவ ஆகிய வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து நேற்று முன்’தினம் (30) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த மான் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்குகளுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
இதன் போது சந்தேகநபர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட Home Helmed என்ற 03 சங்குகள், Chiragra Spider Conch என்ற ஒரு சங்கு , Smooth Spider Conch என்ற ஒரு சங்கு உட்பட தடைசெய்யப்பட்ட மேலும் 04 சங்குகள் மற்றும் 08 மான் கொம்புகளையும் வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மதுகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.




