100 டொலருக்குக் கீழ் சரிந்தது மசகு எண்ணெய் விலை!

1 Min Read

– 2 வாரங்களில் போர் முடியும்; ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் மாற்றம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் 5ஆவது வாரமாக நீடித்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி, ஈரான் மீதான போர் மற்றும் சர்வதேச பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று காலை 100 டொலருக்கும் அதிகமாகக் காணப்பட்ட WTI விலை, தற்போது $97.47 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல் Brent ரக எண்ணெய் சரியாக 100.000 டொலர் நிலையை எட்டியுள்ளது.

இன்று விலை சற்று குறைந்திருந்தாலும், கடந்த ஒரு வருட காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது மசகு எண்ணெய் விலை சுமார் 64% – 69% வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஓரிரு வாரங்களில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் விலைகள் இவ்வாறு குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்திற்குத் தயார் என அறிவித்துள்ளதாகவும், இந்த விலைச் சரிவுக்கு இதுவும் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *