புளோரிடா விமான நிலையத்திற்கு டிரம்ப் பெயர்: FAA ஒப்புதலுக்காக காத்திருப்பு

1 Min Read

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள விமான நிலையத்திற்கு டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது.

விமான நிலையத்திற்கு டிரம்ப் பெயர்

தெற்கு புளோரிடாவில் அமைந்துள்ள பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை டொனால்ட் ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம் என மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான மசோதாவில்(House Bill 919) புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கையெழுத்திட்டுள்ளார்.

புளோரிடா விமான நிலையத்திற்கு டிரம்ப் பெயர்: FAA ஒப்புதலுக்காக காத்திருப்பு | Florida Airport Name Change To Trump Airport

விமான நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கு மாநில அரசாங்கம் சம்மதம் தெரிவித்து இருந்தாலும், அமெரிக்க கூட்டாச்சி விமான போக்குவரத்து நிர்வாகமான FAA இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை.

விமான நிலையத்தின் பெயரை டொனால்ட் ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம் என மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை 2025ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FAA இறுதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, விமான நிலையம் தொடர்பான அனைத்து அரசு ஆவணங்களிலும், வரைபடத்திலும் பெயரை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புளோரிடா விமான நிலையத்திற்கு டிரம்ப் பெயர்: FAA ஒப்புதலுக்காக காத்திருப்பு | Florida Airport Name Change To Trump Airport

அதே சமயம்  பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கான செலவுகளாக புளோரிடா செனட் $2.75 மில்லியன் டொலர்களை பரிந்துரைத்துள்ளது.

டிரம்ப் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது மகன் எரிக் டிரம்ப் இது தொடர்பான மகிழ்ச்சியை X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *