ஸ்பெயினை அடுத்து… அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இன்னொரு ஐரோப்பிய நாடு

1 Min Read

ஈரான மீதான தாக்குதலில் ஈடுபட்டுவரும் போர் விமானங்களுக்கு ஸ்பெயின் தங்கள் வான்வெளியை மறுத்துள்ள நிலையில், தற்போது இத்தாலியும் அதுபோன்றதொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இராணுவ விமானங்களுக்கு

மத்திய கிழக்கு நோக்கிப் பறப்பதற்கு முன்னதாக, சிசிலியில் உள்ள சிகோனெல்லா விமானத் தளத்தில் தரையிறங்க அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு இத்தாலி அனுமதி மறுத்துள்ளது.

ஸ்பெயினை அடுத்து... அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இன்னொரு ஐரோப்பிய நாடு | Italy Refuses Us Use Sicily Base

ஏற்கனவே பிரித்தானியாவும் தங்கள் இராணுவத் தளங்களை ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி மறுத்ததை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை செயல்படாதவர் என்றும் விமர்சித்தார். ஆனால் பிரித்தானியாவில் உள்ள குறிப்பிட்ட இராணுவத் தளமானது அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது இத்தாலியும் தங்களின் சிகோனெல்லா விமானத் தளத்தில் தரையிறங்க அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

வெளியான தகவலில், மத்திய கிழக்கு நோக்கிச் செல்வதற்கு முன், கிழக்கு சிசிலியில் உள்ள அந்தத் தளத்தில் தரையிறங்கச் சில அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக Corriere della ​Sera என்ற நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினை அடுத்து... அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இன்னொரு ஐரோப்பிய நாடு | Italy Refuses Us Use Sicily Base

வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்

ஆனால், எத்தனை விமானங்கள் தரையிறங்க அனுமதி கோரியது அல்லது இத்தாலி எப்போது அனுமதி மறுத்தது என்பது உள்ளிட்ட தகவல்களை உறுதி செய்ய அதிகாரி ஒருவர் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இத்தாலியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களின்படி அமெரிக்கா உரிய அனுமதியைக் கோரவில்லை என்பதாலும், இத்தாலியின் இராணுவத் தலைமை கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதாலும், அனுமதி வழங்கப்படவில்லை என்றே Corriere della ​Sera நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினை அடுத்து... அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இன்னொரு ஐரோப்பிய நாடு | Italy Refuses Us Use Sicily Base

இதனிடையே, இப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், இத்தாலியில் உள்ள தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதைத் தடுக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி அரசாங்கம், அத்தகைய கோரிக்கைகள் ஏதேனும் முன்வைக்கப்பட்டால், நாடாளுமன்ற அனுமதியைப் பெற முயல்வதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *