அடுக்குமாடி குடியிருப்பில் மயானங்களை கட்டும் சீனர்கள்: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

1 Min Read

சீனாவில் சாம்பல் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

சாம்பல் அடுக்குமாடி குடியிருப்புகள்

சீனாவில் நிலவும் வித்தியாசமான ரியல் எஸ்டேட் போக்கிற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அதாவது சீனாவில் சாம்பல் அடுக்குமாடி குடியிருப்புகள்(Bone Ash Apartments) என அழைக்கப்படும் மார்டன் மாயனங்களுக்கு சீனா அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.

சீனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு மயானங்களில் இடம் கிடைப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது, அப்படியே கிடைத்தாலும் அவற்றின் அதீத விலை உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மயான நிலங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் மயானங்களை கட்டும் சீனர்கள்: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை | China Gov Banned Bone Ash Apartments

இதனால் மாற்று வழியை சிந்தித்த அந்நாட்டு மக்கள், இறந்தவர்களின் கல்லறை தோட்டங்களை உருவாக்க அடுக்குமாடி குடியிருப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

சீனாவில் கடந்த 2021 முதல் 2025 ஆண்டு காலகட்டத்தில் அடுக்குமாடி வீடுகளின் விலை சுமார் 40% குறைந்துள்ளது, இதனால் இறந்தவர்களுக்கான மயான நிலங்களை வாங்குவதை விட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி விடலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் மயான நிலங்களுக்கான குத்தகை வெறும் 20 ஆண்டுகள் மட்டுமே, ஆனால் குடியிருப்பு வீடுகளுக்கு அரசு 20 ஆண்டுகால பயன்பாட்டு உரிமை வழங்குகிறது.

எனவே இந்த குடியிருப்பு வீடுகளில் மக்கள் அஸ்திகளை பாதுகாத்து வைப்பது, மெழுவர்த்திகள் மற்றும் சிவப்பு விளக்குகள் ஏற்றி வழிபாட்டு அறைவாக மக்கள் மாற்றி வருகின்றனர்.

சீன அரசு விதித்துள்ள தடை

அடுக்குமாடி குடியிருப்பில் மயானங்களை கட்டும் சீனர்கள்: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை | China Gov Banned Bone Ash Apartments

இந்நிலையில் வீடுகள் வாழ்வதற்கே தவிர, மாயனங்களாக பயன்படுத்த அல்ல என்று குறிப்பிட்டு சாம்பல் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மேலும் பொது மயானங்களை தவிர வேறு எந்தவொரு இடங்களிலும் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கும், கல்லறைகள் கட்டவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னோர்களை கொண்டாடும் சீன மக்களின் கிங்மிங் திருவிழா இன்னும் சில தினங்களில் வரவுள்ள நிலையில் இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *