விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு – என்ன காரணம்?

1 Min Read

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், அதனைதொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு - என்ன காரணம்? | Case Filed On Tvk Vijay Violate Election Rules

பெரம்பூரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கூட்ட நெரிசல் காரணமாக அடுத்து வில்லிவாக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் நாள் பிரச்சாரத்திலே விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு - என்ன காரணம்? | Case Filed On Tvk Vijay Violate Election Rules

தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குமார் என்பவர் அளித்த புகாரின் கீழ், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் போது, 5 ஒலிப்பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 30 ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும், 500 பேர் மட்டுமே கூடுவார்கள் என அனுமதி கோரப்பட்ட நிலையில், 5000க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர்.

இதே போல் பெரம்பூரில் விஜயின் பிரச்சாரத்தின் போது மருத்துவமனை சென்றவர், ஆட்டோ ஓட்டுநர், தனியார் நிறுவன ஊழியருக்கு வழி விடாமல் அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், தவெக மாவட்டச் செயலாளர் சிவா, நிர்வாகி சவுந்தரராஜன் உள்ளிட்டோர் மீது MKB நகர் காவல்துறையினர் 3 வழக்குகள் பதிவு.செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது மிரட்டக் கூடிய செயல். ஒருதலைப்பட்சமாக காவல்துறையினர் செயல்படுகிறார்கள் என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *