ஈரானின் மோதலால் பயனடையும் ரஷ்யா: உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம்

1 Min Read

மத்திய கிழக்கில் அமைதியின்மை தூண்டிவிட்டு உலக பாதுகாப்புக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விளைவிப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உலக பாதுகாப்புக்கு ரஷ்யா அச்சுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மத்திய கிழக்கில் போர் சூழலை தூண்டி விடுவதன் மூலம் ரஷ்யா உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் பிராந்திய போரை நீடிக்க ரஷ்யா வெளிப்படையாக முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார்.

ஈரானின் மோதலால் பயனடையும் ரஷ்யா: உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் | Zelensky Slams Iran Russia Partnership

மேலும் ஈரானுடன் தற்போது ஏற்பட்டு இருக்கும் மோதலில், ரஷ்யாவின் நலன்களும் ஒளிந்து இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா பயன்படுத்தும் பெரும்பாலான ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெத்(shahed) ரக ட்ரோன்கள் ஆகும்.

ரஷ்யா மற்றும் ஈரானின் இந்த கூட்டணி போர் நடவடிக்கைகள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படும் ஏற்றங்களுக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடல் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களின் உள்கட்டமைப்புகளில் நடத்தப்படும் ட்ரோன் தாக்குதலை சாதாரண நிகழ்வாக மாற்றி இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *