ரயில் கட்டணம் முதல் LPG சிலிண்டர் வரை – ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முக்கிய மாற்றங்கள்

3 Min Read

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இந்தியாவில், வருமானவரி, ரயில் கட்டணம், ஏடிஎம் கட்டணம் ஆகியவற்றில் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகிறது.

ரயில் கட்டணம்

முன்னதாக ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட்களை ரத்து செய்யும் போது 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தாலே 50% தொகை திரும்ப வழங்கப்பட்டது.

ரயில் கட்டணம் முதல் LPG சிலிண்டர் வரை - ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முக்கிய மாற்றங்கள் | Lpg Train Refund Major Changes From April1

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அது 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கு முன்பாக, 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், 50 சதவீதம் தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால், சேவை கட்டணம் போக முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை, புறப்படும் இடம் மாற்றம் செய்ய முடியும்.

ஏடிஎம் கட்டணம்

இனி HDFC வங்கி ஏடிஎம்களில் யுபிஐ மூலம் இலவசமாக பணம் எடுப்பதற்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கக் கூடிய வரம்புடன் இதுவும் சேர்க்கப்படுகிறது.

ரயில் கட்டணம் முதல் LPG சிலிண்டர் வரை - ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முக்கிய மாற்றங்கள் | Lpg Train Refund Major Changes From April1

இரண்டும் சேர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள 5 வரம்பை தாண்டிவிட்டால், ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.

பந்தன் வங்கி ஏடிஎம்களில், பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 3 இலவசப் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் உள்ளவர்களுக்கு 5 இலவசப் பரிவர்த்தனைகளையும் அறிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB), குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பணம் எடுக்கும் வரம்பை ரூ. 50,000-லிருந்து ரூ.75,000 ஆக குறைத்துள்ளது.

LPG சிலிண்டர்

 

மத்திய கிழக்கு மோதலினால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரனமாக வீட்டு பயன்பட்டிற்கான LPG சிலிண்டர் விலையில் திருத்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் கட்டணம் முதல் LPG சிலிண்டர் வரை - ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் முக்கிய மாற்றங்கள் | Lpg Train Refund Major Changes From April1

விமான எரிபொருள் கட்டணமும் உயர உள்ளதால், விமான கட்டணத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

பான் கார்டு

புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது திருத்தங்கள் செய்வதற்கான தற்போதைய விண்ணப்பங்கள் மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிடும்.

முன்பு இதில் மாற்றம் செய்ய மற்றும் விண்ணப்பிக்க ஆதார் அட்டை மட்டும் போதுமானதாக இருந்தது. தற்போது கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகிய கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டி வரும்.

இனி வங்கியில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு எண் வழங்கினால் போதுமானது.

அதே போல், நிலம் அல்லது மனை வாங்கும்போது, அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்குமேல் இருந்தால், பான் கார்டு எண் தரவேண்டும் என இருந்தது தற்போது ரூ.10 லட்சத்துக்குமேல் வாங்கும் போது மட்டும் வழங்கினால் போதுமானது.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், 1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இது வருமானவரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

படிவம் 16 மற்றும் படிவம் 16A-க்கு பதிலாக படிவம் 130 மற்றும் படிவம் 131 அறிமுகப்படுத்தப்படும்.

ITR-3 மற்றும் ITR-4 படிவங்களின் கீழ் வரி செலுத்துவோர் இனி ஆகஸ்ட் 31 வரை தங்கள் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்ய முடியும்.

புதிய முறையில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு ரூ.75,000 ஆக உள்ளது. இதையும் சேர்த்தால் ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.

வருமான வரிக் கணக்கு படிவங்களில் மதிப்பீட்டு ஆண்டிற்குப் பதிலாக வரி ஆண்டு என மாற்றப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *