அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்க உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.
தெஹ்ரானில் பல்கலைக்கழகம் மீது தாக்குதல்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளஅமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே போல் ஈரானில் உள்ள எரிபொருள் உற்பத்தி மையங்களை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள எரிபொருள் உற்பத்தி மையங்களை தாக்கி ஈரான் அதே பாணியில் பதிலடி கொடுத்து வருகிறது.

நேற்று தெஹ்ரானில் உள்ள உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஈரான் எச்சரிக்கை
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் IRGC அமைப்பு எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசியர் மற்றும் மாணவர்கள மற்றும் அதன் அருகே குடியிருப்போர் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளி செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தாரில் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நியூயார்க் பல்கலைக்கழகம் உட்பட பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வளைகுடா நாடுகளில் இயங்கி வருகிறது.




