பெட்ரோல், டீசல் மூலம் இந்தியா பெறும் வருமானம்.., எவ்வளவு கோடி தெரியுமா?

1 Min Read

ஈரான்- இஸ்ரேல் போரின் தாக்கத்தால் உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலையேற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்க மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெரிய அளவில் குறைத்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் பல கட்டணங்கள் அடங்கியுள்ளன. இதில் மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் VAT, டீலர் கமிஷன், போக்குவரத்து செலவு மற்றும் செஸ் ஆகியவை அடங்கும்.

பெட்ரோல், டீசல் மூலம் இந்தியா பெறும் வருமானம்.., எவ்வளவு கோடி தெரியுமா? | The Revenue India Derives From Petrol And Diesel

முன்பு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13 இருந்த கலால் வரி தற்போது ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு ரூ.10 இருந்த கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 என எடுத்துக்கொண்டால், அதில் ரூ.55க்கும் அதிகமாக வரி செலுத்தப்படுகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் மத்திய அரசுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது.

பெட்ரோல், டீசல் மூலம் இந்தியா பெறும் வருமானம்.., எவ்வளவு கோடி தெரியுமா? | The Revenue India Derives From Petrol And Diesel

2021-22 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, பெட்ரோல், டீசல் மீதான வரிகளால் மட்டும் அரசு சுமார் ரூ. 4.3 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

ஒரு கணக்குப்படி, இந்தத் துறையிலிருந்து மட்டும் மத்திய அரசு மாதத்திற்கு சராசரியாக ரூ. 30,000 முதல் ரூ.35,000 கோடி வரை வருமானம் பெறுகிறது.

ஆனால் தற்போது கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், அரசின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *