லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு: யார் அந்த அதிர்ஷ்டசாலி?

0 Min Read

பிரித்தானியாவில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவரை, யூரோமில்லியன்ஸ் லொட்டரி நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி?

இங்கிலாந்திலுள்ள Hartlepool என்னுமிடத்தில் உள்ள கடை ஒன்றில் லொட்டரிச்சீட்டு வாங்கிய ஒருவருக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு: யார் அந்த அதிர்ஷ்டசாலி? | Search For Missing British Euromillions Winner

ஆனால், இதுவரை அந்த லொட்டரிச்சீட்டை வாங்கிய நபர் பரிசுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வரவில்லை.

பரிசு பெற்ற நபர், செப்டம்பர் மாதம் 9ஆம் திகதிக்குள் அந்த பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே, மக்கள் தாங்கள் வாங்கிய லொட்டரிச்சீட்டுகளை எங்காவது மறந்து வைத்திருந்தால், அவற்றை தேடி எடுத்து சோதித்துப் பார்க்குமாறு யூரோமில்லியன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *