விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தில் என்ஜின் கோளாறு
சனிக்கிழமை காலை விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் போயிங் 737(6E 579) ரக விமானத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக திடீர் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.
இதனால் 161 பயணிகளுடன் வந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர கால அடிப்படையில் தரையிறக்கப்பட்டது.

காலை 10.54 மணியளவில் முன்னெச்சரிக்கையாக மீட்புக் குழுவினர் தயார் நிலைக்கு வந்தனர், அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் ஓடுப்பாதைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானம் தரையிறக்கப்பட்ட போது எந்தவொரு பாதிப்போ, தீ விபத்தோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுதியுள்ளனர்.
மேலும் விமானத்தில் பயணித்த 161 பயணிகளும் எந்தவொரு காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இண்டிகோ நிறுவனம் விளக்கம்
விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக எஞ்சினில் கோளாறு இருப்பதை விமான கண்டறிந்தார். இதனால் முன்னுரிமை அடிப்படையில் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் உயிர்களை காப்பாற்றுவதே எங்களின் முதன்மை நோக்கம் என்று இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் தற்போது முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், எஞ்சின் கோளாறு ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர்.




