சீனப்பெருஞ்சுவரில் பெயர்களை செதுக்கிய பெண்கள் கைது

1 Min Read

வரலாற்றுச் சிறப்பு மிக்க சீனப்பெருஞ்சுவரில் தங்கள் பெயர்களை செதுக்கிய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சீனப்பெருஞ்சுவரில் பெயர்களை செதுக்கிய பெண்கள்

சீனப்பெருஞ்சுவர் 21,196 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருந்தாலும், Badaling என்னுமிடத்தில் சீனப்பெருஞ்சுவரைக் காண அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் கூடுகிறார்கள்.

சீனப்பெருஞ்சுவரில் பெயர்களை செதுக்கிய பெண்கள் கைது | 2 Womens Arrested For Crave Name On China Wall

இந்நிலையில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அந்த இடத்தில், ஒரு பெண் கத்திரிக்கோல் உதவியுடன் தன் பெயரை செதுக்கியுள்ளார்.

அவருடன் வந்திருந்த மற்றொரு பெண் அதை படம் பிடித்துள்ளார்.

அந்தப் பெண், ‘Zhang Liயும் அவரது சகோதரியான Ruixiaவும் இங்கு வந்திருந்தார்கள்’ என சுவரில் செதுக்கியிருந்தார்.

அதைக் கண்ட மற்ற சுற்றுலாப்பயணிகள் அதிகாரிகளுக்கு தகவலளிக்க, அவர்கள் விரைந்துவந்து அந்த பெண்கள் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.

அவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *