டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது

1 Min Read

தென்னாப்பிரிக்காவில், தன் அக்காவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் மறைத்துவைத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை

தென்னாப்பிரிக்காவிலுள்ள Bellville South என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கான்ஸ்டன்ஸ் (Constance Scholtz, 79) என்னும் பெண்ணை சில நாட்களாக காணாததால் அப்பகுதி மக்கள் அவரது தங்கையான அலெட்டா (Aletta Rose, 63) என்னும் பெண்ணிடம் விசாரித்துள்ளார்கள்.

அவர்களிடம், தன் அக்கா வெளியூர் சென்றுள்ளதாக கூறியுள்ளார் அலெட்டா.

டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது | Woman Arrested Murder Sister Head TupperwareBellville South CPF

அப்போது, கான்ஸ்டன்சின் மகன் வீட்டுக்கு வர, வீட்டுக்குள் டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் தன் தாயின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன், அலெட்டாவின் உடையில் இரத்தம் தெறித்திருப்பதையும் சிலர் கவனித்துள்ளார்கள். பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது | Woman Arrested Murder Sister Head TupperwareBellville South CPF

பொலிசார் மேற்கொண்ட சோதனையில், கான்ஸ்டன்சின் தலையும் உடல் பாகங்களும் வெவ்வேறு டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அலெட்டா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதற்காக தன் சகோதரியை கொலை செய்தார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *