கிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் கழன்று விழுந்த அழகியின் பற்கள்

1 Min Read

தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டியில் எதிர்பாராமல் நடைபெற்ற ஒரு விபத்தை அழகி ஒருவர் தன்னுடைய தன்னம்பிக்கையால் வெற்றி கொண்டுள்ளார்.

அழகியின் அசராத தன்னம்பிக்கை

தாய்லாந்தில் சமீபத்தில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து அழகிப் போட்டி நடைபெற்றது, இதன் பூர்வாங்கச் சுற்றில் கமோல்வான் சானாகோ(Kamolwan Chanago) தனக்கு ஏற்பட்ட எதிர்பாராத மோசமான தருணத்தை லாவகமாக கையாண்டு ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற அறிமுக போட்டியில் மேடை ஏறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது அழகி கமோல்வான் சானாகோ-வின் பற்களுக்கான செயற்கை பிளேட் திடீரென தளர்ந்து வெளியே வந்தது.

ஆனால் கமோல்வான் சானாகோ ஒரு நொடி கூட பதறாமல், அதனை லாவகமாக பிடித்து கேமராவுக்கு தெரியாமல் நொடி பொழுதில் சரி செய்து மீண்டும் தனது அறிமுக உரையை பேசி நிறைவு செய்தார்.

கிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் கழன்று விழுந்த அழகியின் பற்கள்: வைரல் வீடியோ | Miss Grand Thailand Contestants Teeth Loosened

மேலும் இதையடுத்து நடந்த நடைப்பயிற்சியின்(Ramp walk) முடிவிலும் கமோல்வான் சானாகோ அதே புன்னகையுடன் காணப்பட்டார்.

இதன் மூலம் அந்த விபத்து தன்னுடைய தன்னம்பிக்கையை சிறிதும் சிதைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பலரும் கமோல்வான் சானாகோவின் நிஜமான மற்றும் தைரியமான செயலை பாராட்டி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *