மத்திய கிழக்கிற்கு விரையும் 10,000 அமெரிக்க தரைப்படை வீரர்கள்: ஈரானுக்கான காலகெடுவை நீடித்த டிரம்ப்

1 Min Read

மத்திய கிழக்கிற்கு கூடுதலாக 10,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

10,000 கூடுதல் வீரர்கள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் போர் தாக்குதலை கருத்தில் கொண்டு கூடுதலாக 10,000 தரைப்படை வீரர்களை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்துவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலில், கூடுதலாக அனுப்பப்படும் படையில் தரைப்படை மற்றும் கவச வாகனங்கள் உள்ளடக்கிய படையினர் இடம் பெறுவார்கள் எனவும், இது ஜனாதிபதி டிரம்பின் ராணுவ தெரிவுகளை விரிவுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கிற்கு விரையும் 10,000 அமெரிக்க தரைப்படை வீரர்கள்: ஈரானுக்கான காலகெடுவை நீடித்த டிரம்ப் | Us Plan To Deploy 10000 Troops To Middle East

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த இராணுவ விரிவாக்க செய்தியும் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிப் பேச்சுவார்த்தை

போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வந்தாலும், ஈரானுடனான மறைமுக பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் விரைவில் அமைதி எட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

மத்திய கிழக்கிற்கு விரையும் 10,000 அமெரிக்க தரைப்படை வீரர்கள்: ஈரானுக்கான காலகெடுவை நீடித்த டிரம்ப் | Us Plan To Deploy 10000 Troops To Middle East

அதே சமயம் டிரம்ப் இந்த தகவலை, ஈரானிய அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.  மேலும் அமெரிக்காவின் இத்தகைய கருத்துகள் ஒருதலைபட்சமானது என்றும் தவறான செய்திகள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் விடுவிக்க வேண்டும் அல்லது ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஈரானுக்கு இது தொடர்பாக முடிவெடுக்க ஏப்ரல் 6ம் திகதி வரை காலக்கெடுவை நீடிப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *