உலகின் மிகவும் மாசுபட்ட நாடு.., எது தெரியுமா?

1 Min Read

மாசு என்பது இயற்கையான சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களைச் சேர்ப்பதன் மூலம், சூழலை நச்சுத்தன்மையாக்குதல் ஆகும்.

இது காற்று, நீர், மண், ஒலி, ஒளி என பல்வேறு வகைகளில் மனித ஆரோக்கியத்திற்கும், உயிரியல் பன்முகத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

தொழில்மயமாக்கல், போக்குவரத்து, கழிவுகளை முறையாகக் கையாளாமல் விடுவது இதற்கு முக்கிய காரணங்களாகும்.

அந்தவகையில், உலகின் மிகவும் மாசுபட்ட நாடு எது என்பது குறித்து பார்க்கலாம்.

உலகின் மிகவும் மாசுபட்ட நாடு.., எது தெரியுமா? | Pakistan Ranked Worlds Most Polluted Country

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான உலக காற்று மாசு ஆய்வில், பாகிஸ்தான் மிக அதிகமாக மாசுபட்ட நாடாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

IQAir நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானில் காற்றில் உள்ள பி.எம்.2.5 நுண்ணிய துகள்கள், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விட 13 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அதிகம் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில், வங்கதேசம் மற்றும் தஜிகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆய்வில் கண்காணிக்கப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் காற்று தர அளவுகளை பூர்த்தி செய்ய தவறியுள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட நாடு.., எது தெரியுமா? | Pakistan Ranked Worlds Most Polluted Country

மேலும், உலகின் 14% நகரங்கள் மட்டுமே தரநிலைக்கு உட்பட்ட காற்றை பராமரித்து வருகின்றன.

மறுபுறம், ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, எஸ்டோனியா மற்றும் பனாமா உள்ளிட்ட 13 நாடுகள் மட்டுமே பாதுகாப்பான காற்று தரத்தை சுவாசித்து வருகின்றன.

மேலும், கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச பயங்கரவாத குறியீட்டிலும் பாகிஸ்தான் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த நாட்டில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து, 2025ஆம் ஆண்டில் மட்டும் 1,139 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *