ஈரான் தாக்குதலில் 13 அமெரிக்க இராணுவ தளங்கள் செயலிழப்பு

1 Min Read

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக குவைத் பகுதியில் உள்ள தளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Port Shuaiba, Ali Al Salem Air Base, Camp Buehring போன்ற தளங்களில் எரிபொருள் அமைப்புகள், விமான வசதிகள் கட்டுப்பாட்டு மையங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் அமெரிக்க படைகள் தாற்காலிகமாக ஹொட்டல்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் தங்கியிருந்து செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது Remote Warfare எனும் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

Iran US bases attack, Middle East conflict 2026, Remote warfare US troops, Kuwait US military damage, Al Udeid Air Base strike, Iran drone missile attacks, US Iran Israel war news #IranAttack #USBases #MiddleEastWar #RemoteWarfare #IranUSConflict #GlobalSecurity #WarNews

கத்தார் Al Udeid Air Base-ல் அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு தலைமையகம் அமைந்துள்ள இடத்தில், ஈரான் தாக்குதல் நடத்தியதில் முக்கிய ரேடார் அமைப்பு சேதமடைந்துள்ளது.

அதேபோல், பஹ்ரைனில் அமெரிக்காவின் Fifth Fleet தலைமையகத்தில் தொடர்பு அமைப்புகள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆயினும், தற்காலிக இடங்களில் இருந்து செயல்படுவதால் செயல்திறன் குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான் பொதுமக்கள் மூலம் அமெரிக்க படையினரின் இருப்பிடங்களை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதேசமயம், அமெரிக்கா கூடுதல் போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், ஆயிரக்கணக்கான படைகள் ஆகியவற்றை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல்கள், முந்தைய போர்களால் கட்டப்பட்ட அமெரிக்க தளங்கள் தற்போது ஈரானின் மேம்பட்ட ஏவுகணைகளுக்கு எளிதில் இலக்காக மாறியுள்ளதை வெளிப்படுத்துகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *