சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல்

1 Min Read

ஈரானின் இராணுவ கட்டமைப்புகள் பெரும் அளவு சிதைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்

“ஆபரேஷன் எபிக் ஃபியூரி” என்ற பெயரில் ஈரான் மீது இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.

பிப்ரவரி 28ம் திகதி இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்கா மத்திய கட்டளைத் தளபதி(CENTCOM) வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் | Us Israel Attacks 10000 Strategic Targets In Iran

அதில், அமெரிக்க படைகள் ஈரானிய எல்லைக்குள் அமைந்துள்ள 10,000 க்கும் அதிகமான முக்கிய இராணுவ இலக்குகளை அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இராணுவ நடவடிக்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு ஒத்துழைப்பை வெகுவாக பாராட்டினார்.

இழப்புகளின் முக்கிய புள்ளிவிவரங்கள்

அமெரிக்க-இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், ஈரானிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்களில் 92% முழுமையாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் | Us Israel Attacks 10000 Strategic Targets In Iran

ஈரானின் 90% ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை தயாரிக்கும் ஈரானிய இராணுவ தொழிற்சாலைகளில் மூன்றில் இரண்டு பங்கை இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டு இராணுவ படைகள் அழித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தீர்க்கமான முடிவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த போர் தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்து வருவதாக அட்மிரல் கூப்பர் தகவல் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *