உக்ரைன் சூழ்ந்த 150க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: உக்ரைன் எடுத்த துணிச்சலான முடிவு

1 Min Read

உக்ரைனிய வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த 150க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை அதிரடியாக சுட்டு வீழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்

புதன்கிழமை இரவு கிட்டத்தட்ட 153 ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி உக்ரைனிய வான் பரப்பிற்குள் நுழைந்து தாக்குதலுக்கு முயற்சித்த நிலையில், அதனை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த ட்ரோன் தாக்குதலில், ஷாஹெட்(Shahed) ட்ரோன்கள், கெர்பர்(Gerber) மற்றும் இடல்மாஸ்(Italmas) ஆகிய வகை ட்ரோன்கள் பயன்படுத்தபட்டிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் சூழ்ந்த 150க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: உக்ரைன் எடுத்த துணிச்சலான முடிவு | Russia Launched Over 150 Drones To Attack Ukraine

வியாழக்கிழமை காலை 8 மணி அளவில், ரஷ்யாவால் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய தரப்பு வழங்கிய தகவலில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 153 ட்ரோன்களில் 130 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன அல்லது செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் உக்ரைனின் வடக்கு, தெற்கு, மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலக்கை அடைந்த ரஷ்ய ட்ரோன்கள்

உக்ரைன் சூழ்ந்த 150க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: உக்ரைன் எடுத்த துணிச்சலான முடிவு | Russia Launched Over 150 Drones To Attack Ukraine

உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு திறமையுடன் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலும், 16 தாக்குதல் ட்ரோன்கள் 11 வெவ்வேறு இடங்களில் தங்கள் இலக்கை அடைந்தன.

இந்த ட்ரோன் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அதே சமயம் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் விழுந்ததில்  மேலும் 5 இடங்களில் சேதங்கள் பதிவாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *