மூன்று மாதக் கருவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர்: வழக்குப்பதிவு செய்த பொலிசார்

1 Min Read

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், மூன்று மாதக் கரு ஒன்றை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

கருவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர்

பெங்களூருவில், கேரளாவைச் சேர்ந்த 23 வயது ஆண் ஒருவரும், 28 வயதுடைய பெண் ஒருவரும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்கள்.

இந்நிலையில், பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவர்கள் அந்த தம்பதியரின் வீட்டை சோதனையிட்டுள்ளார்கள்.

மூன்று மாதக் கருவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த தம்பதியர்: வழக்குப்பதிவு செய்த பொலிசார் | Foetus Found In Fridge Of Bengaluru Flat

அப்போது, அந்த வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜுக்குள், மூன்று முதல் நான்கு மாதங்கள் வளர்ச்சியடைந்த கரு ஒன்று ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பதை பொலிசார் கண்டுள்ளார்கள்.

விசாரணையின்போது, அவர்கள் இருவரும் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாகவும், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 20ஆம் திகதி, இரவு 11.00 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அந்தப் பெண் கழிவறைக்குச் செல்ல, அவர் வயிற்றிலிருந்து அந்த கரு வெளியேறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்தப் பெண் செவிலியர் பயிற்சி மேற்கொண்டுவருவதால், ஒரு கத்திரிக்கோல் உதவியுடன் தான் தொப்புள் கொடியை வெட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கருவை என்ன செய்வது என்று தெரியாமல், அதை ஒரு பெட்டிக்குள் வைத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்ததாகவும் அந்த தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *