விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கிய திமுக – போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்

1 Min Read

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான திமுக – விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டை முடித்து வருகிறது.

விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கிய திமுக

விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கிய திமுக - போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் | Dmk Alloted 8 Seats To Vck For 2026 Tn Election

விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு 6 தனித்தொகுதிகள் மற்றும் 2 பொதுத்தொகுதிகள் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில், இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கிய திமுக - போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் | Dmk Alloted 8 Seats To Vck For 2026 Tn Election

திருப்போரூர், செய்யூர், நாகை, புவனகிரி, அரூர், காட்டுமன்னார் கோயில், கள்ளக்குறிச்சி, குன்னம், மயிலம், பெரியகுளம், சிவகங்கை, (வானூர் அல்லது திண்டிவணம் ), கே.வி.குப்பம், ஸ்ரீபெரும்புதூர் சென்னை மாவட்டம் (ஒரு தொகுதி) என 10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை திமுகவிடம் விசிக வழங்கியுள்ளது.

நேற்றைய விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, இந்த முறை 8 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

அதேவேளையில், புதுச்சேரியில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *