LPG சிலிண்டர் எடை குறைப்பு குறித்து வெளியான தகவல்- மத்திய அரசு விளக்கம்

1 Min Read

LPG சிலிண்டர் எடை குறைக்கப்டுவதாக பரப்பப்படும் தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெறும் போரினால் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவிற்கு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் LPG விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில், 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரில் (LPG) 10 கிலோ மட்டுமே கிடைக்கும் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த தகவலை மறுத்துள்ளது. இது வெறும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளது.

LPG cylinder news India, 14.2 kg LPG cylinder, LPG shortage India 2026, Hormuz crisis LPG supply, Domestic LPG refill India, Petroleum ministry LPG update, LPG import disruption India #LPGCylinder #IndiaNews #GasSupply #HormuzCrisis #PetroleumMinistry #DomesticGas #EnergyCrisis #BreakingNews #LPGUpdate

அமைச்சகத்தின் கூற்றுப்படி, LPG விநியோகம் சதுரமாக நடைபெற்று வருகிறது. 50 லட்சம் வரை சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவங்கள் LPG உற்பத்தியை அதிகரித்துள்ளதால், உள்ளூர் உற்பத்தி 50-60 சதவீதம் தேவையை பூர்த்தி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வணிக பயன்பாட்டுக்கான LPG விநியோகம் குறைக்கப்பட்டு, வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் LPG தேவையில் 60 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளது. தற்போது, புதிய LPG கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வரவில்லை. சில கப்பல்கள் பார்சீக வளைகுடாவில் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

மொத்தத்தில், LPG விநியோகத்தில் சிக்கல்கள் இருந்தாலும், சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *