
கொலம்பியாவின் புட்டுமாயோ (Putumayo) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லெகுய்சாமோபகுதியில், 125 பேருடன் பயணித்த கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான C-130 ஹெர்குலிஸ் ரக விமானம் நேற்று (23) விபத்துக்குள்ளானது.
ஆரம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகக் கணக்கிடப்பட்ட போதிலும், தற்போது அது 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.










