இலங்கைக்கு எந்த நேரத்திலும் எண்ணெய் வழங்க தயார் – ஈரானிய தூதர்

1 Min Read

நாங்கள் மிகவும் மதிக்கும் நாடான இலங்கைக்கு எண்ணெய் வழங்க தயாராக இருக்கிறோம் என ஈரானிய தூதர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எண்ணெய்

ஹார்முஸ் நீரிணையை தங்களது தங்களது நட்பு நாடுகளுக்கு மூடவில்லை என ஈரான் கூறியது.

அதனைத் தொடர்ந்து தங்களது நட்பு நாடான இலங்கைக்கு எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக, ஈரானிய தூதர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் பேசிய அவர், “இலங்கையுடனான எங்கள் நட்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், எந்த நேரத்திலும் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கிறோம். இலங்கை சிரமங்களை எதிர்கொள்வதை ஈரான் விரும்பவில்லை; இந்தத் தீவு நாடு ஈரான் மிகவும் மதிக்கும் ஒரு நாடாகும்.

இலங்கை எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக இருக்கிறது. ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு வசதிகளை செய்துதர ஈரானிய அரசாங்கம் தயாராக உள்ளது” என்றார்.

மேலும், கடந்தகால ஒத்துழைப்புகளை நினைவுகூர்ந்த டெல்கோஷ், ஈரானின் உதவிக்கான முறையான கோரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ‘Torpedo’ தாக்குதலுக்கு உள்ளான ஈரானியப் போர்க்கப்பலான ‘IRIS Dena’ – வின் பணியாளர்களை மீட்பதில் இலங்கை ஆற்றிய முக்கிய பங்கை சுட்டிக்காட்டினார்.

Alireza Delkhosh/Anura Kumara Disanayake
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *