தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி – 2 தொகுதிகள் ஒதுக்கீடு

1 Min Read

புதுச்சேரி தேர்தலையொட்டி, தவெக கூட்டணியில் நேமக இணைந்துள்ளது.

தவெக கூட்டணியில் இணைந்த நேமக

30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி - 2 தொகுதிகள் ஒதுக்கீடு | Nmk Joins Tvk Alliance In Puducherry Election

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்குமான தவெக வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.

இந்நிலையில், தவெக உடன் முதல் கட்சியாக நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது.

தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி - 2 தொகுதிகள் ஒதுக்கீடு | Nmk Joins Tvk Alliance In Puducherry Election

அந்த கட்சிக்கு உருளையன்பட்டி, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளை தவெக ஒதுக்கியுள்ளது.

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை
அனைவருக்கும் வணக்கம்.
புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.…

நேயம் மக்கள் கழக நிறுவனரான நேரு என்ற குப்புசாமி, 2021 சட்டமன்ற தேர்தலில் ஓர்லியம்பெத் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் தற்போது வரை எந்த கட்சிகளும் கூட்டணியில் இணையாத நிலையில், புதுச்சேரி அரசியலில் வேட்புமனு முடியும் நாளில் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *