சர்ச்சையில் சிக்கி பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துள்ள ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாராவுக்கு தங்கள் வீட்டில் இடமில்லை என்பதில் இளவரசி யூஜீனியின் கணவர் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
அநாதரவாக நிற்கும் சாரா
பிரித்தானிய இளவரசரும் மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.
விவாகரத்து செய்து ஆண்ட்ரூவைப் பிரிந்தாலும், ராஜகுடும்பத்துக்குச் சொந்தமான ராயல் லாட்ஜ் என்னும் பிரம்மாண்ட மாளிகையில் ஆண்ட்ரூவுடன் தங்கியிருந்தார் சாரா.
ஆனால், சமீபத்தில் ஆண்ட்ரூ ராயல் லாட்ஜிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சாரா எங்கே என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், கைவிடப்பட்டு அநாதரவாக நிற்கும் சாராவை, அவரது மகளான இளவரசி யூஜீனி, தனது கணவரான ஜாக் ப்ரூக்ஸ்பேங்குக்குச் சொந்தமான வீட்டில் தங்க வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இளவரசி யூஜீனியின் கணவர் உறுதி
ஆனால், சாராவுக்கு தங்கள் வீட்டில் இடமில்லை என்பதில் இளவரசி யூஜீனியின் கணவர் உறுதியாக இருப்பதாக தற்போது அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஆண்ட்ரூ, சாராவின் பெயர்கள் ஊடகங்களில் தினமும் வெளியாகி அவமானத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தன் குடும்பத்தின் பெயரும் அடிபடுவதை யூஜீனியின் கணவர் விரும்பவில்லை.
அத்துடன், சமீபத்தில் யூஜீனியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியாகியுள்ள நிலையில், நிலைமையை மேலும் மோசமாக்க அவர் விரும்பவில்லை என்கிறார் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர்.
யூஜீனியின் பெற்றோரை மொத்தமாக கைகழுவிவிட யூஜீனியின் கணவர் விரும்பவில்லை என்றாலும், அவர்களால் தன் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் அவமானம் ஏற்படுவதையும் அவர் விரும்பவில்லை.
அத்துடன், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஜாக்கின் தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், ஆண்ட்ரூ, சாரா தொடர்பால், அதையும் கெடுத்துக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை.
ஆக, யூஜீனியின் தாயான சாராவை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதில் யூஜீனியின் கணவரான ஜாக் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர்.




