அமெரிக்காவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: மர்மாக மாயமான 5 விஞ்ஞானிகளில் மூவர் மரணம்

1 Min Read

அமெரிக்காவில் காணாமல்போன ஐந்து விஞ்ஞானிகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையேற்றத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்

சமீபத்திய மாதங்களில், தொடர்ச்சியாக அமெரிக்க விஞ்ஞானிகள் உயிரிழந்த அல்லது காணாமல் போனதைத் தொடர்ந்து ஒரு அச்சம் எழுந்துள்ளது.

mystery missing us scientists three dead

8 மாத கால இடைவெளியில், தென்மேற்கு அமெரிக்காவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், விஞ்ஞானிகள் இருவர் எந்த தடயமும் இன்றி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ஜெனரல் வில்லியம் நீல் மெக்கஸ்லாண்ட் (68), மற்றொருவர் நாசாவின் விண்வெளிப் பொறியாளர் மோனிகா ஜசிண்டோ ரெசா (60) ஆவர்.

இருவரும் விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் முக்கியப் பிரமுகர்களாக இருந்தனர். ரொக்கெட் என்ஜின்களுக்கான ஒரு எதிர்கால உலோகத்தை உருவாகும் ரெசாவின் பணியை ஜெனரல் மேற்பார்வையிட்டார்.

மூன்று விஞ்ஞானிகளின் மரணங்கள்

அதேபோல் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வேதியியல் உயிரியல், அணுக்கரு இணைவு மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்ட அல்லது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளதாக சுயாதீன ஆய்வாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கூட அஞ்சுவதாக கூறப்படுகிறது.

கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் வாஷிங்டன் டி.சி-யில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிஃப் துறையின் புலனாய்வாளர்கள், உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்னும் அறிவிக்கவில்லை, மேலும் இந்த வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையில், மற்ற மூன்று விஞ்ஞானிகளின் மரணங்களும் அதே அளவு கவலையளிப்பதாக அமைந்துள்ளன.

mystery missing us scientists three dead

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *