2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டு (GTI) அறிக்கையை, பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) வெளியிட்டுள்ளது.
2026 பயங்கரவாத நாடுகளின் பட்டியல்
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நிகழும் மொத்த பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, பயங்கரவாதிகளால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, மொத்த காயங்களின் எண்ணிக்கை, மொத்த பணயக்கைதிகளின் எண்ணிக்கை ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2,944 பயங்கரவாத சம்பவங்களில், 5,582 பேர் உயிரிழந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாக islamic state (IS) உள்ளது. இது 15 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.

186 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், இந்த ஆண்டு முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
புர்கினா பாசோ 2வது இடத்திலும், நைஜர் 3வது இடத்திலும், நைஜீரியா 4வது இடத்திலும், மாலி 5வது இடத்திலும், சிரியா 6வது இடத்திலும், சோமாலியா 7வது இடத்திலும், காங்கோ ஜனநாயகக் குடியரசு 8வது இடத்திலும், கொலம்பியா 9வது இடத்திலும், இஸ்ரேல் 10வது இடத்திலும் உள்ளது.
ஆப்கானிஸ்தான் 11வது இடத்திலும், இந்தியா 13வது இடத்திலும், ரஷ்யா 17வது இடத்திலும், ஈரான் 18வது இடத்திலும் உள்ளது.
இதே போல், அமெரிக்கா 28வது இடத்திலும், ஜேர்மனி 29வது இடத்திலும், அவுஸ்திரேலியா 31வது இடத்திலும், பிரான்ஸ் 35வது இடத்திலும், பிரித்தானிய 38வது இடத்திலும், கனடா 53வது இடத்திலும், மலேசியா 57வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 68வது இடத்திலும், சவுதி அரேபியா 80வது இடத்திலும், பஹ்ரைன் 99வது இடத்திலும் உள்ளது.
குவைத், கத்தார், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பூஜ்ய புள்ளிகளுடன் 100வது இடத்தில் உள்ளது.




