அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் இழப்பீடு வழங்க ஈரான் கோரிக்கை

1 Min Read

அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் இழப்பீடு கோரிக்கை

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் சட்ட ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஐக்கிய நாடுகள் சபைக்கு 15 அம்சங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளார்.

அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் இழப்பீடு வழங்க ஈரான் கோரிக்கை | Iran Demands Compensation For Attack Nuclear Site

அந்த கடிதத்தின் முக்கிய அம்சங்களாக, மார்ச் 1 ஆம் திகதி முதல் Natanz மற்றும் Bushehr ஆகிய ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தகைய தாக்குதல், ஈரானின் சொத்துக்களை சேதப்படுத்துவதுடன்  மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பகுதிக்கும் கதிரியக்கப் பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று எச்சரித்துள்ளார்.

மேலும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

அதே சமயம், அத்துமீறிய இத்தகைய செயல்களுக்கு இரு நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கு அழைப்பு

கடிதத்தில் ஈரான் விவகாரத்தில் சர்வதேச சமுகங்கள் தலையிட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் இழப்பீடு வழங்க ஈரான் கோரிக்கை | Iran Demands Compensation For Attack Nuclear Site

மேலும் ஐ.நா தன்னுடைய கடமைகளை உணர்ந்து, ஈரான் மீதான அத்துமீறிய ராணுவ நடவடிக்கையை கண்டிக்க வேண்டும். மேலும் எதிர் காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்படும் தாக்குதலை ஐ,நா தலையீட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததற்காக தாக்குதல்தாரிகள் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் வழிவகை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *