கத்தாரை அடுத்து சவுதி அரேபியாவும்… ஈரான் மீது அதிரடி நடவடிக்கை

2 Min Read
U.S. President Donald Trump meets with Saudi Deputy Crown Prince and Minister of Defense Mohammed bin Salman in the Oval Office of the White House in Washington, U.S., March 14, 2017. REUTERS/Kevin Lamarque - RTX30ZWC

தங்களின் எல்லைக்குள் ஈரான் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் இராணுவத் தூதர் மற்றும் தூதரகப் பணியாளர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சவுதி அரேபியா கெடு விதித்துள்ளது.

ஏற்கத்தகாத நபர்களாக

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அதிகாரிகள் வெளியேற 24 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தாரை அடுத்து சவுதி அரேபியாவும்... ஈரான் மீது அதிரடி நடவடிக்கை | Saudi Arabia Expels Iran Staff

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தைச் சேர்ந்த இராணுவத் தூதர், உதவி இராணுவத் தூதர் மற்றும் தூதரகப் பணியாளர்கள் மூவர் ஆகியோரை ஏற்கத்தகாத நபர்களாக (personae non gratae) அறிவித்துள்ளனர்.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போரால், அமெரிக்க இராணுவத்திற்கு செயல்பட அனுமதிக்கும் சவுதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் ஈரானால் தொடர்ந்து தாக்கப்பட்டு, கடுமையான சேதங்களை எதிர்கொண்டுவரும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய, உறுதிசெய்யப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள சவுதி அரேபியா, போர் தொடங்கியதிலிருந்து நூற்றுக்கணக்கான ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

இதில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களின் வரிசையில், சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டுள்ளன; அத்துடன், அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள தலைநகர் ரியாத்தும் குறிவைக்கப்பட்டு, இம்மாதத் தொடக்கத்தில் அங்கு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வியாழக்கிழமையன்று, செங்கடல் துறைமுகமான யான்புவில் உள்ள அரம்கோ-எக்சான் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே ட்ரோன் ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து, அங்கு எண்ணெய் ஏற்றுமதிப் பணிகள் பாதிக்கப்பட்டடன.

எதிர்கால உறவுகளுக்கு

ஹார்முஸ் நீரிணை வழியாக வளைகுடாவிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில், சவுதி அரேபியாவிற்கான ஒரே ஏற்றுமதி வாயிலாக யான்பு துறைமுகம் திகழ்கிறது.

இந்த நிலையில், ஈரான் மீதான இந்த இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை விமர்சிக்க மறுத்து வரும் சவுதி அரேபியா, இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஈரான் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டதாக கூறியதுடன், தங்களைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.

கத்தாரை அடுத்து சவுதி அரேபியாவும்... ஈரான் மீது அதிரடி நடவடிக்கை | Saudi Arabia Expels Iran Staff

சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் வரலாற்று ரீதியாகவே சிக்கல்கள் நிறைந்தவையாக இருந்துவந்துள்ளன; எனினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவின் மத்தியஸ்தத்துடன் இவ்விரு நாடுகளும் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியைத் தொடங்கின.

இந்த நிலையில், ஈரானின் தொடர் தாக்குதல்கள் மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால உறவுகளுக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் எச்சரித்துள்ளார்.

ஈரானிய அதிகாரிகளை வெளியேற்றும் சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையானது, புதன்கிழமை கத்தார் முன்னெடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *