மற்ற அணிகள் எங்களை கடுமையாக எதிர்கொள்ளப் போகின்றன – விராட் கோஹ்லி

1 Min Read

ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதற்கு 2-3 சீசன்களாக கடுமையாக உழைத்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மகுடம் சூடிய பெங்களூரு

2008ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்ணத்தை வெல்ல ஒவ்வொரு சீஸனிலும் கடுமையாக போராடியது.

Virat Kohli

ஒருவழியாக கடந்த சீஸனில் (2025) 17 ஆண்டுகளில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கிண்ணத்தை வென்று மகுடம் சூடியது.

எனவே நடப்பு சாம்பியனாக இருக்கும் பெங்களூரு அணி அதனை தக்கவைத்துக் கொள்ள முனைகிறது.

இதனைக் குறிப்பிட்டு, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) இனி வரும் நாட்களை வீணாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் கடினமாகத்தான் போகும்

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு நாங்கள் சாதித்ததை அடைவதற்காக, கடந்த 2-3 சீஸன்களாக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். இனி இது இன்னும் கடினமாகத்தான் போகும்.

ஏனென்றால், மற்ற அணிகள் எங்களைக் கடுமையாக எதிர்கொள்ளப் போகின்றன. இந்த நாட்களை நாம் வீணாக்கக் கூடாது; நாம் முன்னணியில் இருக்க வேண்டும்.

எனவே, இப்போதே முழு கவனத்துடன் செயல்படுவோம். நாம் பங்கேற்கும் எந்தவொரு பயிற்சி அமர்விலும் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க வேண்டாம். இந்த இரண்டரை மாதங்களுக்கு நாம் நமது 120 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும்.

இந்த சவாலை எதிர்கொள்ள நாம் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம் என்பதை அனைவரின் முகங்களில் இருந்தும் என்னால் காண முடிகிறது” என்றார்.

Virat Kohli

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *