கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டுவிட்டு மறைந்த காமெடியன்: நீதிமன்றத்தின் முடிவு

1 Min Read

கோடிக்கணக்கில் மதிப்புடைய சொத்துக்களை விட்டு விட்டு பிரபல காமெடியன் ஒருவர் மரணமடைந்த நிலையில், அவரது சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டுவிட்டு மறைந்த காமெடியன்

கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டுவிட்டு மறைந்த காமெடியன்: நீதிமன்றத்தின் முடிவு | Sean Hughes Comedian Death Estate CharityGetty

லண்டனில் பிறந்த பிரபல காமெடியனான Sean Hughes, 2017ஆம் ஆண்டு தனது 51ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

இதற்கிடையில், அவருக்கு கல்லீரல் நோய் இருந்ததும், அது முற்றியிருந்ததும், அவரது மரணத்துக்குப் பின் தெரியவந்தது.

கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டுவிட்டு மறைந்த காமெடியன்: நீதிமன்றத்தின் முடிவு | Sean Hughes Comedian Death Estate CharityChampion News

Sean Hughesக்கு, சுமார் 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய சொத்துக்கள் இருந்தன. அவற்றை, தான் ஆதரித்து வந்த Shelter என்னும் தொண்டு நிறுவனத்துக்கு எழுதிவைத்துவிட்டு உயிரிழந்திருந்தார் அவர்.

ஆனால், அவை சட்டப்படி உயிலாக பதிவு செய்யப்படவில்லை. ஆக, அந்த விடயம் நீதிமன்றம் செல்ல நேர்ந்தது.

கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டுவிட்டு மறைந்த காமெடியன்: நீதிமன்றத்தின் முடிவு | Sean Hughes Comedian Death Estate CharityChampion News

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் அந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, Sean Hughesக்கு சொந்தமான, சுமார் 4 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் Shelter தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

4 மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 1,66,02,23,200.00 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டுவிட்டு மறைந்த காமெடியன்: நீதிமன்றத்தின் முடிவு | Sean Hughes Comedian Death Estate CharityChampion News

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *