பிரித்தானியா தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை மீண்டும் புதுப்பித்துள்ளது.
இம்முறை, இந்தியா இலங்கை உட்பட 31 நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயணம் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா விடுத்துள்ள புதிய பயண ஆலோசனை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக பிரித்தானியாவிலிருந்து புறப்படும் பல விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அளவில் அபாயம் நிலவுவதால், அத்தியாவசிய தேவை இருந்தாலொழிய ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவேண்டாம் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவித்திருந்தது.
Getty
இந்நிலையில், இந்தியா, இலங்கை முதல், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா வரையிலான 31 நாடுகள் தொடர்பில் புதிய பயண ஆலோசனை ஒன்றை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பயணம் தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ’மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல், வான்வெளி மூடல், விமானங்கள் தாமதம், ரத்து போன்ற பல இடையூறுகளை உருவாக்கியுள்ளது.
நீங்கள் பயணிக்கும் நாடு மத்திய கிழக்கில் இல்லை என்றாலும்கூட, உங்கள் பயணத்திட்டங்கள் பாதிக்கப்படக்கூடும்’ என குறிப்பிட்டு, தனது புதிய பயண ஆலோசனையில் இந்தியா, இலங்கை உட்பட 31 நாடுகளின் பட்டியலை இணைத்துள்ளது.




