தானியங்களுடன் புறப்படவிருந்த இரண்டு கப்பல்கள் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்

1 Min Read

உக்ரைனின் ஒடெசா பகுதியில் வெளிநாட்டுக் கொடியுடன் காணப்பட்ட இரண்டு கப்பல்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தகக் கப்பல்கள்

குறித்த தகவலை பிராந்திய ஆளுநர் Oleh Kiper என்பவரே தெரிவித்துள்ளார். வெளியான தகவலின் அடிப்படையில் பலாவ் மற்றும் பார்படாஸ் நாடுகளின் கொடிகளை ஏந்திய இரண்டு வர்த்தகக் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டு, தானியங்கள் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தானியங்களுடன் புறப்படவிருந்த இரண்டு கப்பல்கள் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் | Russian Drones Hit Two Ships

இந்த நிலையில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு தானியக் கிடங்கும் நிர்வாகக் கட்டிடங்களும் தாக்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஈரான் போர் தொடர்பில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து தானியக் கப்பல்களும் ரஷ்ய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *