ஈரான் போர்: திறந்த வெளியில் தொழுகை நடத்த தடை விதித்துள்ள நாடு

1 Min Read

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், திறந்த வெளியில் தொழுகை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

திறந்த வெளியில் தொழுகை நடத்த தடை

பல நாடுகள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், மக்கள் திறந்த வெளியில் தொழுகை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

ஈரான் போர்: திறந்த வெளியில் தொழுகை நடத்த தடை விதித்துள்ள நாடு | Uae Bans Open Air Namaaz Amid Iran Strike

ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அமீரகம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழிமறித்து அழித்தாலும், அவற்றின் பாகங்கள் விழுந்து மக்களைக் காயப்படுத்த வாய்ப்புள்ளது.

ஆகவே, மக்கள் திறந்தவெளிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், நாடுமுழுவதும் மக்கள் மசூதிகளுக்குள் மட்டுமே தொழுகை நடத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

ரம்ஜானுக்கு முன் இஸ்லாமியர்கள் பெரும் கூட்டமாக திறந்தவெளிகளில் தொழுகை நடத்துவது வழக்கம்.

ஆனால், ஈரான் போர் உருவாக்கியுள்ள பதற்றம் காரணமாக, மக்களுடைய பாதுகாப்பு கருதி, மசூதிகளுக்குள் மட்டுமே தொழுகை நடக்கும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *