5 தலைநகரங்கள்; தமிழர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை – நாம் தமிழர் தேர்தல் வாக்குறுதி

1 Min Read

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.

2026 நாம் தமிழர் தேர்தல் அறிக்கை

இதில், 49 தலைப்புகளில் 492 பக்க தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

5 தலைநகரங்கள்; தமிழர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை - நாம் தமிழர் தேர்தல் வாக்குறுதி | Seeman Release 2026 Ntk Election Manifesto

இந்த அறிக்கையில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.

மாநிலங்களவை உறுப்பினராகி அதன் மூலம் அமைச்சராகும் முறையை மாற்ற போராடுவோம்.

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க போராடுவோம்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் பட்டியலின மக்களுக்கு தனித்தொகுதிகள் உள்ளது போல் பெண்களுக்கும் தனித்தொகுதிகள் அமைக்க போராடுவோம்.

தற்போது உள்ள இடஒதுக்கீட்டிற்கு மாறாக அண்ணல் அம்பேத்கர் வழியில் இடஒதுக்கீட்டை ஆய்வு செய்து தமிழ் குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். மற்ற மாநிலங்களில், தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிற மொழிவழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.

வாக்கு செலுத்துவது கட்டாயம் ஆக்க பிற மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்கு செலுத்த உரிமை பெற்றுத் தரப்படும்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 75 சதவீதம் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

குடிநீரை காசுக்கு விற்பது தடை செய்யப்பட்டு, அனைவர்க்கும் தூய குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

மதுவிற்பனை தடை செய்யப்பட்டு, பனம்பால் தென்னம்பால் தமிழ் தேசிய மதுபருகமாக அறிவிக்கப்படும்.

முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையிலே மருத்துவம் சட்டமியற்றப்படும்.

வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரம், குடிநீர், LPG சிலிண்டர் ஆகியவற்றுக்கு வீட்டு கட்டணமே வசூலிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கபட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *