முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் – பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு

2 Min Read

ஈரான் முக்கிய தலைவர்களை இழந்தாலும் தொடர்ந்து போரிடுவதற்கு மொசைக் பாதுகாப்பு கோட்பாடே காரணம் என கூறப்படுகிறது.

முக்கிய தலைவர்களை இழக்கும் ஈரான்

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் தாக்குதலிலே ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனி உள்ளிட்ட 40 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு | Mosaic Defence Doctrine Continue To Fight Iran

இதனையடுத்து, ஈரானில் மக்கள் ஆட்சி மாற்றம் கோரி வீதிக்கு வருவார்கள், ஈரானின் அரசு நிர்வாகம் மற்றும் ராணுவ கட்டமைப்பு நிலை குழையும் என நினைத்த அமெரிக்கா ஏமாற்றமடைந்து.

ஈரான் சுமார் 2 வாரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகிறது. ஈரானின் புதிய உச்சத்தலைவராக அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் நேற்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNCS) செயலாளராக உள்ள அலி லாரிஜானியையும்(ali larijani), பாசிஜ் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானியையும் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு | Mosaic Defence Doctrine Continue To Fight Iran

இன்று ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு | Mosaic Defence Doctrine Continue To Fight Iran

இருந்தும், ஈரான் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மொசைக் பாதுகாப்பு கோட்பாடு

மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டும், நிர்வாக மற்றும் ராணுவ கட்டமைப்பு நிலை குலையாமல் தொடர்ந்து போரிடும் பின்னனியில் ஈரானின் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு(Mosaic Defence) உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு | Mosaic Defence Doctrine Continue To Fight Iran

மத்திய தலைமை அல்லது முக்கிய இராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டாலும், ஈரானின் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரவலாக்கப்பட்ட இராணுவ உத்தியே மொசைக் பாதுகாப்பு கோட்பாடு ஆகும்.

மூத்த ஈரானிய இராணுவ உத்தி நிபுணரும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) முன்னாள் தளபதியுமான முகமது அலி ஜஃபாரி இந்த ராணுவ கோட்பாட்டை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு | Mosaic Defence Doctrine Continue To Fight Iran

இந்த கோட்பாட்டின் கீழ், IRGC, பசிஜ், வழக்கமான இராணுவப் பிரிவுகள், ஏவுகணைப் படைகள், கடற்படைச் சொத்துக்கள் மற்றும் உள்ளூர் கட்டளைக் கட்டமைப்புகள் ஆகியவை ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பாக உள்ளன.

IRGC 31 மாகாணக் கட்டளைகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணக் கட்டளையும் தனக்கென சொந்த ஆயுதங்கள், உளவுத்துறை மற்றும் கட்டளை அமைப்புகளுடன் ஒரு தன்னிறைவு பெற்ற இராணுவப் பிரிவாகச் செயல்படுகிறது.

உயர்மட்டத் தலைமையுடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டால், உள்ளூர் பிரிவுகள் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தையும் திறனையும் இந்தக் கோட்பாடு வழங்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *