மாதம் 30,000 பவுண்டுகள் வருமானம்..நிறுவனத்தை கலைத்த பிரித்தானிய மொடல் அழகி

1 Min Read

பிரித்தானியாவைச் சேர்ந்த மொடல் அழகி லோட்டி மோஸ் வரி செலுத்த தவறியது, கடன் சுமையால் தனது நிறுவனத்தை கலைக்கிறார்.

30,000 பவுண்டுகள்

28 வயதாகும் மொடல் அழகி, ஊடக பிரபலமான லோட்டி மோஸ் (Lottie Moss) ஆபாச தளம் ஒன்றின் மூலம் 30,000 பவுண்டுகள் வருமானம் ஈட்டி வந்தார்.

Lottie Mossஆனால், கடந்த ஆண்டு அவர் அந்த தளத்தைவிட்டு வெளியேறிய பிறகு, அவரது வருமானம் கடுமையாகக் குறைந்துவிட்டதாகவும், அதனால் நிலுவையில் உள்ள HMRC கடனை அவரால் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் லோட்டி மோஸ் குறிப்பிட்ட ஆபாச தளத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து, அவரது வணிகம் பல்வகைப்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சியில், யூடியூப் சேனல் உள்ளிட்ட புதிய திட்டங்களைத் தொடங்கி, கடந்த 7 மாதங்களாக மாற்று வருமான வழிகளையும் ஆராய்ந்து வருவதாக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனம் திவால்

இதற்கிடையில், லோட்டி மோஸ் இந்த முயற்சிகள் மூலம் கணிசமான கடன்களை ஈடுசெய்யும் அளவிற்கு போதுமான பணத்தை இன்னும் ஈட்டவில்லை, இதன் விளைவாக நிறுவனம் திவாலாகிவிட்டது.

Lottie Moss

டெய்லி மெயிலிடம் ஆதாரம் ஒன்று கூறுகையில், “லோட்டி மோஸ் இந்த நிலைமையால் மிகவும் சங்கடப்படுகிறார். தனது நிலுவையில் உள்ள வரிக் கட்டணங்களை செலுத்த போதுமான வருமானம் இல்லாததால், அவர் தனது நிறுவனத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளார்” என்றது.

மேலும், லோட்டி மோஸ் தற்போது வர்த்தக மொடலிங் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறார் என தெரிய வந்துள்ளது.

Lottie Moss

Lottie Moss

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *