ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு: உலக நாடுகளுக்கு ஈரான் ஒற்றைக் கோரிக்கை

1 Min Read

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரிலிருந்து தனித்து, ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் சீர்குலைவுகளுக்குத் தீர்வு காண முடியாது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அக்ராச்சி தெரிவித்துள்ளார்.

கண்டிக்க வேண்டும்

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் இதை தெரிவித்துள்ளதாக அவரது சமூக ஊடக செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு: உலக நாடுகளுக்கு ஈரான் ஒற்றைக் கோரிக்கை | Hormuz Iran Urges States Condemn

மேலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கவலை கொள்ளும் நாடுகளும் நிறுவனங்களும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், உடனடியாக அமெரிக்காவும் களமிறங்கியது. இதில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

தற்போது உயர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி காயங்களுடன் தப்பியுள்ளார் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

ஆனால், உடனடியாக பதில் தாக்குதல் தொடுத்த ஈரான், இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீதும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணையால் பழி வாங்கியது.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு: உலக நாடுகளுக்கு ஈரான் ஒற்றைக் கோரிக்கை | Hormuz Iran Urges States Condemn

ட்ரம்ப் விடுத்த அழைப்பு

அத்துடன் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தும் முடங்கியது. ஈரானின் எச்சரிக்கையை மீறி புறப்பட்ட 7 கப்பல்கள் தாக்கப்பட்டன. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலருக்கு மேல் எகிறியது.

போர் நீடிக்கும் என்றால் எண்ணெய் விலை 200 டொலரை எட்டும் என்றே ஈரானின் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை விடுவிக்க ட்ரம்ப் விடுத்த அழைப்பும் பல நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு: உலக நாடுகளுக்கு ஈரான் ஒற்றைக் கோரிக்கை | Hormuz Iran Urges States Condemn

ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது ஈரான் போரில் ட்ரம்ப் மட்டும் தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *