இந்தியாவில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்? அமெரிக்கர் உட்பட 7 வெளிநாட்டினர் கைது

1 Min Read

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கூறி, 6 உக்ரைனியர் மற்றும் ஒரு அமெரிக்கரை தேசிய புலனாய்வு முகமை(NIA) கைது செய்துள்ளது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்

மிசோரம் உள்ளிட்ட ஒரு சில வடகிழக்கு மாநிலங்களுக்கு தகுந்த காரணங்கள் இன்றி வெளிநாட்டினர் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியர்களே அங்கு உள் நுழைய முன் அனுமதி பெற வேண்டும்.

இந்தியாவில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்? அமெரிக்கர் உட்பட 7 வெளிநாட்டினர் கைது | Nia Arrested 7 Foreigners For Plot Against India

இந்நிலையில் வெளிநாட்டு விசா மூலம் இந்தியா வந்த இவர்கள், சட்டவிரோதமாக மிசோராமிற்கு சென்று அங்குள்ள இந்தியாவிற்கு எதிரான குழுக்களை சந்தித்து பேசியுள்ளனர்.

அதன் பின்னர் மிசோரம் வழியாக மியான்மருக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று சில இனக்குழுக்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் இருந்து ஏராளமான ட்ரோன்களை மிசோரமிற்கு இறக்குமதி செய்து, இந்தியாவிற்கு எதிரான குழுக்களுக்கு வழங்கியதும் தெரிய வந்துள்ளது.

7 வெளிநாட்டவர்கள் கைது

இந்தியாவிலிருந்து அவர்கள் தங்களின் தாயகம் திரும்பும் போது விமான நிலையங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்? அமெரிக்கர் உட்பட 7 வெளிநாட்டினர் கைது | Nia Arrested 7 Foreigners For Plot Against India

டெல்லி விமான நிலையத்தில் 3 உக்ரைனியர்களும், லக்னோ விமான நிலையத்தில் 3 உக்ரைனியர்களும், கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு அமெரிக்கரும் கடந்த 13 ஆம் திகதி UAPA பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க வைக்க உத்தரவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 11 நாட்களுக்கு NIA காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *