இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்.., யார் தெரியுமா?

1 Min Read

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர்.

இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இளம் வயதிலேயே ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்.., யார் தெரியுமா? | Who Is The Highest Paid Music Composer In India

இந்நிலையில், அனிருத் ரவிச்சந்தர் தனது சம்பளத்தை உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் “AA23” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்திற்காக அனிருத் சுமார் ரூ.25 கோடி சம்பளம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகை இந்தியாவில் ஒரு இசையமைப்பாளர் பெறும் மிக உயர்ந்த சம்பளமாக கருதப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்.., யார் தெரியுமா? | Who Is The Highest Paid Music Composer In India

இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திற்கு ரூ.12 கோடி மற்றும் ஜனநாயகன் படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் இசைக்கு உலகம் முழுவதும் கிடைக்கும் வரவேற்பு காரணமாகவே தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் வழங்க முன்வருகின்றனர்.

இந்நிலையில், அல்லு அர்ஜுனின் 23வது படத்திற்கு அனிருத் பெறும் சம்பளம் இந்திய திரையுலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *