லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில் ஆட்டநாயகனான இலங்கை வீரர்: ராயல் ரைடர்ஸ் அபார வெற்றி

1 Min Read

லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில் ராயல் ரைடர்ஸ் பஞ்சாப் அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிஷா அணியை வீழ்த்தியது.

சதுரங்க டி சில்வா அதிரடி

ராயல் ரைடர்ஸ் பஞ்சாப் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிஷா அணிகளுக்கு இடையிலான லெஜெண்ட்ஸ் லீக் நேற்று போட்டி நடந்தது.

Royal Riders Punjab

இதில் முதலில் ஆடிய ராயல் ரைடர்ஸ் அணியில் முகமது ஷாஷாத் 41 ஓட்டங்களும், குணாதிலக 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கையின் சதுரங்க டி சில்வா (Chaturanga de Silva) 19 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 28 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பினர்.

ஆட்டநாயகன்

எனினும், கடைசி கட்டத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் 9 பந்துகளில் 13 ஓட்டங்கள் விளாச, ராயல் ரைடர்ஸ் பஞ்சாப் அணி 156 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் ஒடிஷா அணியில் மோர்னே வான் விக் (Morne van Wyk) 38 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.

Morne van Wyk

ஆனால், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கோனார்க் சூர்யாஸ் ஒடிஷா 18.3 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ஏஞ்சலோ பெரேரா, திசர பெரேரா மற்றும் ஃபர்மன் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதிரடியாக 28 ஓட்டங்களும், ஒரு விக்கெட்டும் கைப்பற்றிய சதுரங்க டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Morne van Wyk

Royal Riders Punjab

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *